தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி - எல்.முருகன் மீது விசாரணை! - பாஜக தலைவர் எல்.முருகன்

சென்னை: தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜகவை சேர்ந்த எல்.முருகன், வானதி சீனிவாசன், இல.கணேசன் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

leaders
leaders

By

Published : Nov 9, 2020, 2:22 PM IST

தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் சுதந்திர நாளன்று, மாநில தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பாஜக கொடி ஏற்றக்கூடிய கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக, பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்தத் தலைவர் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரை சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி புகாரளித்திருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஆஜராகி, பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம் என்பதால், எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார் மாம்பலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், எனவே, அதுகுறித்து விளக்கமளிக்க அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: முன் ஜாமின் வழக்கை வாபஸ் பெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details