இது குறித்து செய்தியாளர்களிடம் அவர், பொறியியல் படிப்புகளான பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 77 ஆயிரம் இடங்கள் இருந்தன. இந்தாண்டு 2,000 இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளன. அந்த இடங்களுக்கும் 8 பொறியியல் கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளன எனக் கூறினார்.
பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை: உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா - B Tech
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் குறையவில்லை என உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், பொறியியல் படிப்பில் கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்தால், அவர்களுக்கு கல்வி கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி,பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அப்போது மாணவர்கள் கல்லூரி குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு தகவல் கையேடு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.