தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வண்டலூர் பூங்காவில் சிம்பன்சி குட்டியின் பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடிய ஊழியர்கள் - baby chimpanzee birthday

சிம்பன்சி குட்டியான 'ஆதித்தியா'வின் முதல் பிறந்தநாளை வண்டலூர் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களின் முன்னிலையில் ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று கேக் வெட்டி கொண்டாடியது.

வண்டலூர் பூங்காவில் சிம்பன்சி குட்டியின் பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்
வண்டலூர் பூங்காவில் சிம்பன்சி குட்டியின் பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்

By

Published : Jun 10, 2022, 7:09 PM IST

Updated : Jun 10, 2022, 7:26 PM IST

சென்னை: அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 29 வயதான கொம்பி மற்றும் 24 வயது கௌரி (சூசி) ஆகியவற்றிற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த சிம்பன்சி குட்டியான 'ஆதித்தியா'வின் முதல் பிறந்தநாளை வண்டலூர் பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களின் முன்னிலையில் ஊழியர்களுடன் சேர்ந்து நேற்று கேக் வெட்டி கொண்டாடியது.

பிறந்த நாள் விருந்தின் ஒரு பகுதியாக, சிம்பன்சிகளுக்கு மிகவும் பிடித்தமான "உறைய வைத்த பழ கேக்" வழங்கப்பட்டது.

கேக் சாப்பிட்ட சிம்பன்சி

உயிரியல் பூங்கா சமீபத்தில் பார்வையாளர்களால் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கும், உணவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும் குடிநீருக்கும் ஸ்டிக்கர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் மேலாண்மையைப் பொறுத்தவரை இந்த அமைப்பு நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

அதன் செயல்பட்டின் முதல் நான்கு நாட்களில், 77% பாட்டில் பார்வையாளர்களால் திருப்பி கொடுக்கப்பட்டது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் சிற்றுண்டி பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை கொண்டு வருவதை தவிர்க்குமாறு உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:யார் இந்த அப்து ரோஸிக்? - முழுவிவரம்!

Last Updated : Jun 10, 2022, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details