தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 321 தொடக்கப்பள்ளிகளும் ஆறாயிரத்து 966 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கிவருகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பராமரிப்பு, கட்டுமான பணிகள், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தொடக்கப்பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை இடிப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், பழுதடைந்த கட்டடங்களை இடிக்க முடியாமல் தொடக்கக் கல்வித் துறை உள்ளது. கல்வித் துறை அலுவலர்கள் பலமுறை எடுத்துக் கூறியும் நிதி இல்லை என ஊரக வளர்ச்சித் துறையினர் தட்டிக்கழிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரை, தளம், கதவு, ஜன்னல் போன்றவற்றில் ஏற்பட்டிருந்த பழுதுகளின் விவரம், மாணவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பள்ளி கட்டடங்களின் விவரங்கள் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டன.