தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்சாரப் பேருந்து.... முதலமைச்சர் அறிவிப்பார் - சென்னை

சென்னை: மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிட உள்ளார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

vijayabaskar

By

Published : Jun 4, 2019, 2:24 PM IST

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறிக்கின்ற வகையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய பெரு நகரங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.

அரசின் சார்பில், இரண்டு கட்டங்களாக ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் 5,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அவற்றில் 3,500 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுவருகின்றன. எஞ்சியுள்ள 1,500 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தில் தெரிவித்தார்

மேலும் அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் நலனை கருதி தமிழ்நாட்டில் முதன்முறையாக, மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை சென்னை, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் இயக்கிடும் பொருட்டு சி 40 என்கிற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதனைத் தொடர்ந்து, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியோடு, 12,000 புதிய தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிடும் திட்டம் நடப்பு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மின்சாரப் பேருந்துகளை சென்னையில் இயக்குவதற்கான முக்கிய வழித்தடங்கள், சார்ஜிங் பாயிண்ட்ஸ் அமைத்தல் குறித்து விவரமான திட்ட அறிக்கை அந்நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து விரைவில் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details