தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டு வரையறை பணிகள் மேற்கொள்ளப்படாததால் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமிருக்கும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கான கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எஞ்சியுள்ள மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அந்த மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.