தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூதாட்டியை கொன்று நாடகமாடிய வழக்கில் 5 பேர் கைது! - கோவை மூதாட்டி கொலை வழக்கு

கோயம்புத்தூர்: கெம்பட்டடி காலனி மூதாட்டி கொலை வழக்கில் நாடகமாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

elder-women-murder-case
elder-women-murder-case

By

Published : Oct 13, 2020, 7:49 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கெம்பட்டடி காலனியைச் சேர்ந்தவர் தனலட்சுமி(62). அவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் அவர் செப்.30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், இந்தக் கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யபட்டு, அவர்களிடமிருந்து 70 சவரன் தங்க நகைகள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார், "கெம்பட்டி காலனி 4ஆவது வீதியை சேர்ந்த லதா(எ) ராணி மளிகை சாமானங்கள் வாங்க கடைக்குச் சென்று வரும் போது மூதாட்டி தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் மூதாட்டியிடம் ஏராளமான பணம், நகைகள் இருப்பது லதாவிற்கு தெரியவந்தது.

அதனை தனது தம்பி திலக் என்பவரிடம் தெரிவித்தார். ஏற்கனவே கடன் தொல்லையில் இருந்த திலக் தனது சகோதிரி மாலா (எ) ரேவதி, நண்பர்கள் செல்வம், மகேஷ்குமார், சத்தியசீலன், ராணி ஆகியோருடன் மூதாட்டியிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

அதன்படி செப்.30ஆம் தேதி திலக், செல்வம் இருவரும் மூதாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது திலக் திட்டமிட்டபடி விஷம் கலந்த இனிப்பை அவருக்கு கொடுத்துள்ளனர். பின்னர் மூதாட்டி தொண்டை விக்கி தனக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதை அறிந்து கூச்சலிட்டார்.

அதனால் பயந்த திலக், செல்வம் மூதாட்டியின் தலையில் அடித்து கீழே படுக்கவைத்தனர். அதையடுத்து வீட்டிலிருந்த 70 சவரன் நகை 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர் அவற்றை 5 பங்குகளாக பிரித்துக்கொண்டு, தப்பித்தனர். தற்போது அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி திலக் தீவிரமாக தேடப்பட்டுவருகிறார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாண்டி கோயில் பூசாரி கொலை வழக்கில் 5 பேர் சரண்!

ABOUT THE AUTHOR

...view details