தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முயற்சி' - அமைச்சர்

காணாமல் போகின்ற மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர மத்திய மீன்வளத்துறை அமைச்சரோடு பேசி அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும், என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முயற்சி
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முயற்சி

By

Published : Oct 3, 2022, 10:27 PM IST

சென்னை: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், இம்மாநாட்டில் இன்று (அக். 3) பங்கேற்று உரையாற்றினார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா, மாநில IT அமைச்சர்களுக்காண மாநாடு (Digital India State IT Ministers’ Conference) நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாநிலங்கில் இருந்து வருகை புரிந்தவர்கள் இந்த Digital Initiatives பற்றி பேசினர்.

குறிப்பாக ’கடைசி மைல் இணைப்பு’ (Last Mile Connectivity) என்று சொல்வோம். அனைத்து கிராமங்களுக்கும் Internet சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சி தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

அதுபோன்று எல்லா மக்களுக்கும் இணைய வழியில் அரசினுடைய சேவைகளை பெறுகின்ற வசதி, இ-சேவை மூலமும் ஒவ்வொரு அலுவலகத்திலும், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் ’மின் அலுவலகம்’(e-Office) மூலமாக இணைப்பது, e-Office திட்டத்தினை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது, அதே போன்று தரவுகளின் அடிப்படையிலான அரசு தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டுகின்ற திட்ட உதவிகள் கொடுக்கின்ற அந்த திட்டம் போன்றவை மிகுந்த வரவேற்பை இங்கு பெற்றிருக்கிறது.

இதுபோன்று தமிழ்நாட்டிலேயே தொழில்முனைவோர், புதுமையான முயற்சிகள் (Startups, Innovations), போன்றவற்றிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் அங்கு இருக்கக் கூடியவர்களுக்கு நல்ல ஒரு சூழலை (Ecosystem) ஏற்படுத்துகிறது. இந்த மாநாடு மூலமாக பல்வேறு மாநிலங்களில் எப்படி IT துறை செயல்படுவது என்பதை நாங்கள் கவனமாக கவனிக்க முடிந்தது.

இன்னும் தீவிரமாக ஒரு புது உத்வேகத்தோடு நமது மாநிலத்தில் நல்ல முறையில் பணியாற்றி, இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பயன் சாதாரண மக்களுக்குக்கூட கிடைக்கின்ற விதத்தில் நம்முடைய அரசு பணிகளையும், அரசினுடைய செயலையும், அதிகமாக Digitalise செய்கின்ற முயற்சியை நாம் மேற்கொள்வோம்.

நம் மீனவர்கள் காணாமல் போகின்ற நேரத்தில் அவர்களைக் கண்டுபிடிப்பது போன்றவற்றில் மிகப்பெரிய சிக்கல் தொடர்ந்து இருந்து வருகிறது. அவற்றிற்கான தீர்வு காண சில தொழில்நுட்பங்களைப் பார்வையிட்டேன். உண்மையிலேயே சிறந்ததாக இருக்கிறது. அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் அவர்களோடு பேசி அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

இதுபோன்று மருத்துவத்துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கண்டுபிடிப்புகள் மிக சிறப்பாக இருக்கிறது. இன்று ஆளில்லா விமான தொழில்நுட்பம் (Drone Technlogy), விவசாயம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, அதே போன்று காவல் துறையில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

தொழில் துறையில் இயந்திர மனித தொழில்நுட்பம் பயன்பாட்டில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறைகள் மூலமாக என்ன வாய்ப்புக்களை பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்துரைக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details