தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுத் தேர்வு எழுத இருக்கிற மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Jul 31, 2021, 3:45 PM IST

Updated : Jul 31, 2021, 10:37 PM IST

சென்னை: மருத்துவ வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார் . அதன் பிரதிகளை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார்.

இந்த புத்தகங்களை மாணவர்கள், 43 நாட்களில் எழுதி கின்னஸ் சாதனை படைத்து இருப்பதாகவும் எழுதுக இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறக்க ஆலோசனை

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், " உள்ளபடிக்கு மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளேன். நான்காம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி படிப்பவர்கள் வரை 100 மாணவர்கள் இணைந்து நூறு புத்தகங்களை எழுதியுள்ளனர். இதற்காக முன்னெடுப்பு செய்யத எழுதுக இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று மாநிலங்களில், விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்ற அடிப்படையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும் போது, மருத்துவ வல்லுனர்கள் குழுவிடம் ஆலோனைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனால் மருத்துவ வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து 75 விழுக்காடு, பாதிக்கப்படாத பெற்றோர்களிடம் 85 விழுக்காடு கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எதுவும் வரவில்லை. தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் சமுதாயத்திற்கு உங்களால் ஆன பங்களிப்பைச் செய்யுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து, "ஆசிரியர் தகுதி தேர்வை ஆன்லைன் மூலமாகவும்,நேரடியாகவும் நடத்துவது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றவர், தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பாடங்கள் குறைக்கப்படும்

பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வு 39,579 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 313 பேர் மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத இதுவரை 23 மாணவர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. அது குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும்.

விரைவில் பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்; 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்க ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விலிருந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு

Last Updated : Jul 31, 2021, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details