தமிழ்நாட்டின் அரசியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை...
- 1954 இல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பழனிசாமி.
- ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டப்படிப்பு பயின்றார்.
- கல்லூரி காலத்திலேயே எம்ஜிஆர் மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால், செங்கோட்டையன் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
- 1974 இல் சிலுவம்பாளையம் அதிமுக கிளைக் கழகச் செயலாளராக கட்சிப்பணியை தொடங்கினார் பழனிசாமி.
- எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்.
- 1989 இல் முதல் முறையாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜெ அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றி பெற்றார்.
- பின்னர், சேலம் மாவட்ட அதிமுகவினரிடையே எடப்பாடி பழனிசாமி என்ற அடைமொழி பிரபலமானது.
- 1991 இல் 2 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதிமுகவின் சேலம் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
- 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, வெற்றி வாகை சூடினார்.
- 2003 ஆம் ஆண்டு சிமெண்ட் வாரியத் தலைவராகவும், 2006 இல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை நியமித்தார் ஜெயலலிதா.
- 2007 ஆம் ஆண்டு அதிமுக அமைப்பு செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.
- 2011 இல் 3 ஆவது முறையாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
- 2014 ஆம் ஆண்டு அதிமுக தலைமை நிலைய செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.
- 2016 ஆம் ஆண்டு 4 ஆவது முறையாக மீண்டும் எடப்பாடி தொகுதியின் உறுப்பினராக தேர்வானவர், பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
- அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நால்வரில் ஒருவரானார்.
- 2017 இல் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிசாமியை தேடி வந்தது.
- கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு, கட்சியை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பான ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் தேர்வாயினர்.