வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. அது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, “2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது, கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என ஜெயலலிதா பக்குவமாக நடந்து கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அந்தப் பக்குவம் இல்லை.
நாடாளுமன்ற தேர்தலில்கூட நாங்கள் விருப்பப்படாத தொகுதிகளைத் தான் அதிமுக வழங்கியது. இம்முறை அதிமுக தான் எங்களிடம் வந்தது. நாங்கள் செல்லவில்லை. அதிலும், மற்ற கட்சிகளை எல்லாம் முதலில் அழைத்துவிட்டு, எங்களை இறுதியாகவே அழைத்தார்கள். இருப்பினும் கூட்டணி தொடர வேண்டும் என மிகவும் பொறுமையாக இருந்தோம். இறுதியாக 18 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கேட்டோம்.