தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - மைதான்ட

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

By

Published : May 25, 2021, 7:01 PM IST

ஹெச்.பி.எல். நிறுவனத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டில் உள்ள ஹெச்.பி.எல். ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்க உதவி எண் வெளியீடு!

சென்னை: கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பைப் பூர்த்தி செய்ய இலவச தொலைபேசி எண் 1098-யை சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்டுள்ளது.

'போர்க்கால நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது'- அமைச்சர் மா.சு

தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய குழு அமைப்பு!

மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணைக் கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அலுவலர், காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அலுவலர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

பத்மசேஷாத்ரி பாலியல் விவகாரம்: தீப்பொறியான இன்ஸ்டாகிராம் ஷேட்... அப்படி என்னதான் பேசியிருக்கிறார்கள்?

பத்மசேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னை காட்டுத்தீயாக பரவியதற்கு இரு மாணவிகளுக்கு இடையேயான இன்ஸ்டாகிராம் உரையாடல் தீப்பொறியாக இருந்துள்ளது.

'தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசுக்கு தயக்கம் ஏன்...' - கி.வீரமணி கேள்வி

சென்னை: கரோனாவை வீழ்த்துவதில் தமிழ்நாடு அரசு வேகம் காட்டும் நிலையில், தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

'கிட்ஸ்களுக்கு கிரிக்கெட் கிட்': இது உதயநிதி உலா

குப்பை கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று சிறுவர், சிறுமியர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.

'பாதுகாப்புக்கு பிசிசிஐ எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும்'

புதுடெல்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவியாக இரண்டாயிரம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ அமைப்பு வழங்கவுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் திடீர் மாற்றம்... உண்மையை ஜீரணிக்க முடியவில்லை - நடிகை ராஷ்மிகா மந்தனா

சென்னை: கோவிட் நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் நமக்குச் சவால் விடுகிறது. இது போன்ற விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

2 முறை சேதமடைந்த ’மைதான்’ பட செட்: போனி கபூர் வருத்தம்

'மைதான்' படத்திற்காக போடப்பட்ட செட் சேதமடைந்தது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details