சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 11இல் செயற்பொறியாளராகப் பணியாற்றிவந்த சுரேஷ் குமார் என்பவரையும், மண்டலம் பன்னிரெண்டில் செயற்பொறியாளராகப் பணியாற்றிவந்த பானுகுமார் என்பவரையும் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை சார்பாக மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அலுவலர்களும் முறைகேட்டில் ஈடுபட்டு, கையூட்டுப் பெற்றுள்ளதாக நுண்ணறிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது இருவரும் கையூட்டுப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.