சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
186 பயணிகளுடன் துபாயிலிருந்து சென்னை வந்த எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல், பக்ரையினிலிருந்து 167 பயணிகளுடன் சென்னை வந்த ஃகல்ப் ஏர்வேஸ் விமானம், ஹாங்காங்கிலிருந்து 204 பயணிகளுடன் வந்த கேத்தே பசிபிக் விமானம், மும்பை மற்றும் லக்னோவிலிருந்து வந்த 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.