சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேற்று (நவ.07) தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.
இந்த மூன்று தேதிகளிலும் மிக அதிகமான கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூண்டி ஏரியில் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரியில் ௨ ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று (நவ.07) காலை முதல் மாலை வரை 27.2 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் மயிலாப்பூர், அம்பத்தூர் பகுதிகளில் அதிக கன மழை பெய்துள்ளது. அதேபோல அயனாவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை, கிண்டியில் மிக அதிகமாக உள்ளது.
4 பேர் உயிரிழப்பு