தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: கடலோர மாவட்டங்களில் மிதமான மழை - moderate rainfall at coastal areas

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

By

Published : Dec 30, 2021, 1:39 PM IST

சென்னை: தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (டிசம்பர் 30) கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,

டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 31ஆம் தேதியன்று, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,

ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி மாத நிலவரம்

ஜனவரி ஒன்றாம் தேதி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,

ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி இரண்டாம் தேதி, கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,

மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் - உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி மூன்றாம் தேதி, தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

டிசம்பர் 30ஆம் தேதிமுதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க: டிச 31 இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details