தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பில் சேர 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள்

By

Published : Jun 22, 2019, 12:05 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த 10ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,050 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் என 1,830 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் 12ஆம் வகுப்பினை முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பொதுப்பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 45 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்கள் 11,12ஆம் வகுப்பினை ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டும்.

இந்நிலையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-20ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த 10ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை 24ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் சேர்க்கை ஆணை ஜூன் 28ஆம் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.

மேலும், சேர்க்கை ஆணையை www.tnscert.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விபரங்களை பயன்படுத்தி மாணவர்கள் தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம் என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details