2019-20ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடக்கலை பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கட்டடக்கலை பொறியியல் (பி.ஆர்க்) கல்வி பயில விரும்பும் மாணவர்கள் நாளை(ஜூலை15) முதல் 26 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - online application
சென்னை: "பி.ஆர்க் பட்டப்படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் 26ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்" என்று, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 46 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, ஜுலை மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்த்தல் பணி 46 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் நடைபெறும். அதன்பின் இணையதள அட்டவணைப்படி கலந்தாய்வு நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.