தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடிபோதையில் கமாண்டர் மனைவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது... - சென்னை தனியார் விடுதி

சென்னையில் கடலோர காவல்படை கமாண்டர் மனைவியிடம் குடி போதையில் தவறாக நடக்க முயற்சி செய்த அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் கமாண்டர் மனைவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது...
குடிபோதையில் கமாண்டர் மனைவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது...

By

Published : Feb 25, 2022, 9:34 AM IST

சென்னை:சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் கேளிக்கை நட்சத்திர விடுதியில் கடந்த புதன்(பிப்ரவரி 23) இரவு தனது மனைவியுடன் வந்திருந்த கடலோர காவல்படை கமாண்டர், அவரது மனைவியுடன் நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கு மது போதையிலிருந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து கமாண்டர் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இரண்டு முறை எச்சரிக்கை செய்தும் மூன்றாவது முறை கமாண்டரின் மனைவி அருகில் நெருக்கமாகச் செல்ல முயற்சி செய்தபோது, இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடலோர காவல்படை கமாண்டர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுத்த தகவலின் பேரில் அங்குசென்ற தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

மருத்துவக் கல்லூரி பேராசிரியர்

விசாரணை செய்ததில் அவர் பழனியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பதும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மருத்துவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்......

ABOUT THE AUTHOR

...view details