மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். தமிழ்நாடு அரசு 2012ஆம் ஆண்டு முதல் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்தின்படி, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள் தேர்வினை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெறாதவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை பள்ளிக்கல்வித் துறை கடைசி வாய்ப்பாகக் கூறியிருந்தது.
இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் ஆயிரத்து 747 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும் யாரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.