தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளிப்பு; கணவர், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை - Chennai

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண்ணின் வழக்கு
வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண்ணின் வழக்கு

By

Published : Sep 1, 2021, 10:28 PM IST

சென்னை, கிண்டி சதானிபேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த மூன்று மாதத்திலிருந்து வரதட்சணை கேட்டு சுகன்யாவை, பார்த்திபனும், அவரது தாய் பத்மாவும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா 2012 பிப்ரவரி 20ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து, கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் பார்த்திபன், மாமியார் பத்மா ஆகியோரை கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமத் பாரூக், பார்த்திபன், பத்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: 'மாநகராட்சி, நகராட்சி தேர்தல் அறிவிப்புக்கான வழக்கு ஒத்திவைப்பு'

ABOUT THE AUTHOR

...view details