தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பள்ளிகள் திறப்பு; அவசரம் வேண்டாம்' - ராமதாஸ் எச்சரிக்கை - பள்ளிகள் திறப்பு

சென்னை: பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : Jul 20, 2020, 7:47 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம், என்பது குறித்து இன்றைக்குள் தெரிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாதத்தில் திறக்கலாம் என்றும், இதுபற்றி பெற்றோரின் விருப்பங்களை அறிந்து முடிவெடுக்கும்படியும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது, விரைந்து முடிவெடுக்கும்படி மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துகிறது, என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

உலகளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சிந்திப்பதே பொருத்தமற்ற செயலாகத்தான் இருக்கும். கரோனா முழுமையாக ஒழிக்கப்படாமல் பள்ளிகளைத் திறந்து, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் மிகவும் நெருக்கமாக அமரவைக்கப்பட்டால் அதுவே தீவிர நோய்ப் பரவலுக்கு வழிவகுத்து விடக்கூடும். எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக் கூடாது.

அதுமட்டுமின்றி, பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில்கூட மத்திய அரசு தலையிட்டு அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாக அமையும். மாறாக, பள்ளிகளை எப்போது திறக்கலாம், வகுப்புகளை எந்த முறையில் நடத்தலாம், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், என்பன குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை எப்போது? - அமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details