தமிழ்நாடு

tamil nadu

அமமுகவுடன் கைகோர்க்கிறதா தேமுதிக?

By

Published : Mar 10, 2021, 5:18 PM IST

சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில் அமமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

dmdk ammk
dmdk ammk

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் கைகோர்க்க மறைமுக பேச்சுவார்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று தேமுதிக வெளியிட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர்கள், எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மட்டும் கட்சி அலுவலகத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஒரு விடுதியில் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவித்தார். இதில், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் மாணிக்க ராஜா, தேமுதிகவின் பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றதாகவும், அதனாலேயே வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதமாகி வருவதாகவும் அவர் கூறினார்.

தேமுதிகவிற்கு மக்கள் நீதி மய்யத் துணைத்தலைவர் பொன்ராஜ், கூட்டணிக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், தேமுதிக கூட்டணி வைக்கப்போவது மநீமவுடனா அல்லது அமமுகவுடனா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, தேமுதிகவிற்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இத்தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் தேமுதிக தலைமை ஆலோசிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இதையும் படிங்க:'வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு திட்டம்'- டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details