சென்னை:அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "2007ஆம் ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்த நிலையில், அது 2008ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் மட்டும் ஓபிசி பிரிவினருக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த நிலையில், சுமார் 16 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.