இந்தி மொழி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக தரப்பில் நாளை போராட்டம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதை அடுத்து இந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து திமுகவை ஆளுங்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் விமர்சித்த்துவருகின்றனர்.
Udhayanidhi stalin meets reporters இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கரூர் செல்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது திருச்சி விமான நிலையத்தில் நாளையப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் விமர்சித்து வருவதைப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இந்தி திணிப்பிற்கு எதிரான, திமுகவின் போராட்ட அறிவிப்பைக் கண்டு மத்திய பாஜக அரசு அச்சமடைந்துவிட்டது.
திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுநர் அழைத்துப் பேசியதே, திமுக போராட்ட அறிவிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். போராட்டத்தில் இருந்து ஸ்டாலின் பின் வாங்கவில்லை, ஆளுநர் அழைத்து பேசியதால்தான் போராட்டம் கைவிடப்பட்டது” என்றார்.