தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக தனிமைப்படுத்தப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டால் திமுக தனிமைப்படுத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

By

Published : Aug 7, 2019, 12:47 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், " சுஷ்மா ஸ்வராஜ் பாஜகவில் உள்ள ஒவ்வொரு பெண் நிர்வாகிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம்" என்றார்.

மேகதாது அணை குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகக் கூறும் குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் வகையில் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

காஷ்மீர் விவகாரம் பற்றி அவர், "காஷ்மீர் விவகாரத்தை நாட்டின் ஒற்றுமையாகப் பார்க்க வேண்டும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே மத்திய அரசின் முடிவை எதிர்க்கின்றன. இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் எதிர்கட்சிகள் கூட திமுகவை ஆதரிக்காது, திமுக தனிமைப்படுத்தப்படும்" என திமுகவை விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details