தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 135 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்துவருகிறது.
இதைக் கொண்டாடும்விதமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவே மயிலாப்பூர் பகுதியில், “மே 6ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார்” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.