கரோனா வைரஸ் தொற்று உள்ளதா இல்லையா என்பதை விரைந்து பரிசோதனை செய்வதற்கு, சீனாவிடமிருந்து ’ரேபிட் டெஸ்ட் கிட்டை’ தமிழ்நாடு அரசு வாங்கியுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் நேற்றுதான் தமிழ்நாடு வந்தடைந்தது. முதல்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்துள்ளன. இந்நிலையில் அரசு வாங்கும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " கரோனா நோய் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.