தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற சூளுரைக்கிறோம் தலைவரே’ - ஸ்டாலின் உரை

சென்னை: மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகள் என ஒரேநேரத்தில் இரு எதிரிகளுடன் சளைக்காமல் மோதிக் கொண்டு ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற சூளுரை ஏற்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Aug 7, 2020, 2:29 PM IST

மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி 'எங்கெங்குக் காணினும் கலைஞர்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி உரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”இன்னும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம் உயிரினும் மேலான அன்புத் தலைவர் நம்மோடு இல்லை என்பதை! வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு கடல் அலையின் தாலாட்டில் அவர் நீடு துயில் கொள்ளச் சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரே தெரிகிறார். அவர் முகம், அவர் உருவம், அவர் குரல் என்று எங்கு நோக்கினும் முத்தமிழறிஞர் கலைஞரே இருக்கிறார்.

இனத்துக்கு ஒரு இடைஞ்சல் என்றால், முதல் குரல், நம் குரல் தான். மொழிக்கு ஒரு தடங்கல் என்றால் முதல் குரல், நம் குரல் தான். திமுகவை வீழ்த்த வீண் அவதூறுகளையும், பொய் புகார்களையும் புனை கதைகளையும் பரப்பி வருகிறார்கள். நாங்கள் தீயை தாண்டிக் கொண்டு இருக்கிறோம் நாட்டுக்காக. ஆறாவது முறையாய் திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரை ஏற்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிரான மாநில அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான மத்திய அரசுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் சளைக்காமல் மோதிக் கொண்டு இருக்கிறோம். வெல்வோம் தலைவரே, அடுத்த நினைவு நாளில் சொல்வோம் தலைவரே ” என்று உரையாற்றியுள்ளார்.

’ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற சூளுரைக்கிறோம் தலைவரே’ - ஸ்டாலின் உரை

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details