சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உட்பட 11 ஆதினங்கள், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மே 5 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவதாம் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், "தெய்வீகப்பேரவை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களை உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருக்குவளையில் மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இந்த அரசு ஆன்மீக அரசு" என்றார்.