தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழையால் பாதியில் நின்ற திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை: அதிமுகவை கண்டித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மழை வந்ததால் கூட்டத்தை பாதியிலேயே கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

meeting
meeting

By

Published : Jan 2, 2021, 3:58 PM IST

திமுக ஆட்சியில் வேளச்சேரி-ஆலந்தூர் இடையே ரூ.417 கோடியில் பறக்கும் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் இதுவரை அப்பணிகளை முடிக்காத அதிமுக அரசை கண்டித்து, ஆலந்தூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லேசான மழை தூறியதால், மேடையில் இருந்தவர்கள் குடை பிடித்தபடி கண்டன உரையாற்றினர்.

மழையால் பாதியில் நின்ற திமுக ஆர்ப்பாட்டம்!

ஆனால் மழை அதிகமாக பெய்யத் தொடங்கியது. இதனால் கண்டன ஆர்ப்பாட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் மேடையை விட்டு கீழே இறங்கினர். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்ததால் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:'என்னை மிரட்டாதீர்கள்?' - ஸ்டாலினை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details