தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! - இலங்கை கடற்படை

சென்னை: அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

By

Published : Feb 1, 2021, 3:05 PM IST

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை அரசையும், அதனை வேடிக்கை பார்ப்பதாக மத்திய மாநில அரசுகளையும் கண்டித்து, திமுக சார்பில் இன்று காசிமேடு மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக மீனவர்கள் மேசியா, நாகராஜன், செந்தில், சாம்சன் ஆகியோர் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு, இதுவரை மத்திய மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்காமல், மீனவர் நலனில் அக்கறை செலுத்தாமல் இருப்பதாக அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

மேலும், மீனவர்களுக்கு என எவ்வித அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவி, டீசல் மானியம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: என்டிசி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details