சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேரந்தவர் ராஜேஷ். இவர் நிகழ்ச்சிகளுக்கான அலங்காரப் பணிகளை செய்து வருகிறார். நேற்றிரவு ராஜேஷ் அபிராமபுரம் பகுதியில் உள்ள கெனால் சாலை சந்திப்பு அருகே நடந்து வந்து கொண்டிருந்தப்போது அவரை வழிமறித்த 5 நபர்கள் மதுபோதையில் அவரை மிரட்டித் தாக்கியதுடன் அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராஜேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த போண்டா (எ) சுப்பிரமணி (25), டேவிட் (18), வீரா (21), சரவணன் (22), சரத்குமார் (30) ஆகியோரை கைது சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் அபிராமபுரம் காவல் துறையினர் இன்று மாலை வழிப்பறியில் ஈடுபட்ட போண்டா (எ) சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல் நிலையத்திற்கு வந்த திமுக 123ஆவது வட்டச் செயலாளர் ராஜேந்திரன் என்பவர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.