தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்; சவால்விட்ட திமுக எம்.பி' - 'முடிந்தால் தூக்குங்கள்'; பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! - பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம் - சவால் விடும் திமுக எம்பி

திமுக எம்.பி.திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், 2 பாஜக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தருமபுரி எம்.பி. விடுத்துள்ள ட்விட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க எம்பியின்  ட்விட்டா் பதிவு…தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தி.மு.க எம்பியின் ட்விட்டா் பதிவு…தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

By

Published : May 9, 2022, 1:27 PM IST

Updated : May 9, 2022, 5:49 PM IST

தர்மபுரி:திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கமலாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவில் தனக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதைக் கொண்டாடும் தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நான்கு பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 2 பேர் திமுக உடன் தொடர்பில் உள்ளதாக திமுக எம்.பி. கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "முடிந்தால் தூக்குங்கள்…பார்க்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக எம்எல்ஏ!

Last Updated : May 9, 2022, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details