கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பட்டியலின மக்களையும், குறிப்பிட்ட ஓர் சமுதாயத்தையும், ஊடகத்தினரையும் ஒருமையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பட்டியலின மக்கள் பற்றிய கருத்துக்கு வருந்துகிறேன் - திமுக எம்.பி., ஆர்.எஸ். பாரதி
சென்னை: பட்டியலின மக்கள் பற்றி தான் பேசிய கருத்து, அந்த மக்கள் மனதைப் புண்படுத்தியதை அறிந்து மிகவும் வருந்துவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஆர்.எஸ். பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் பட்டியலின மக்கள் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் பட்டியலின மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அந்த மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்" என விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றுக! திமுக வலியுறுத்தல்