சென்னை:தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயர்கல்வி (Fellow ship program) தொடர்பாகவும் அமெரிக்க வாழ் தமிழர் அமைப்பினரின் கூட்டங்களில் கலந்து கொள்ள 12 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல வந்த அண்ணாமலையை பாஜகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுகவினர்.. - சென்னையில் அண்ணாமலை முன்னிலையில்
அமெரிக்கா செல்ல சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் திமுக வட்ட செயலாளர் உட்பட 20 பேர் பாஜகவில் இணைந்தனர்.
Etv Bharat
அப்போது திரு.வி. க நகர் தொகுதி திமுக 74 வது வட்டச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திமுகவினர், வன்னியர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதையும் படிங்க: அக்டோபர் 2 மனித சங்கிலி.. காவல்துறை நல்ல பதிலை தரும் என எதிர்பாக்கிறோம்...திருமாவளவன்