மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு - திமுக
சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளார்.
மேலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி இனிவரும் நாட்களிலிருந்து கட்சித் தலைவர்கள் பரப்புரையையும் தொடங்கஇருக்கின்றனர். இதற்கிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை பத்து மணிக்கு வெளியிடுகிறார். தமிழ்நாட்டின் உரிமை பிரச்னைகள், ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினருக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியாகும் என திமுக தரப்பிலிருந்து தகவல்கள் கசிவதால் இந்த தேர்தல் அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.