திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டபேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், தற்போது நடைபொறும் திமுக பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாதாக கருதப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கியமான மாற்றங்கள் கட்சியில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது பணியை பார்த்துக்கொள்ள செயல் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.