தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-2021ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது விவாதிக்கப்படாத குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக, இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கும்படி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக நினைவூட்டல் கடிதம் அளித்துள்ளது.
பட்ஜெட்டில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து விவாதம்? கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்துள்ள திமுக - பட்ஜெட்டில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு
சென்னை: நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்கும்படி திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளது.
tn budget
இந்நிலையில், டி.என்பிஎஸ்சி தேர்தல் முறைகேடு விவகாரம் தொடர்பாகவும் பேரவையில் விவாதிக்கும்படி திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளது. டி.என்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், திமுக கொடுத்துள்ள இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபடுமா என்பது நாளையே தெரியவரும்.
இதையும் படிங்க:"போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" - அமித் ஷா