தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'உள்ளாட்சித் தேர்தக்கு தடை கோரிய திமுக படுதோல்வியடைந்துள்ளது' -  திண்டுக்கல் சீனிவாசன் - local body election

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்குகளில் எல்லாம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

By

Published : Dec 18, 2019, 8:09 PM IST

சென்னை விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு மூன்று முறை உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குப் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நிற்க திமுகவிற்கு விருப்பமில்லையா, ஏன் போட்டியிட மறுக்கிறீர்கள், எதற்கு தடை கேட்கிறீர்கள் என பல கேள்விகள் எழுப்பிய நீதிபதி தடைபோட முடியாது என தெரிவித்தார். வழக்கு போட்டால் தேர்தலை நிறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருந்த திமுகவினருக்கு நீதித்துறை உரிய பதிலளித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திமுக வழக்கு போட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறியது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசுவது போல் உள்ளது என்றார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் அதிகளவில் போராட்டம் நடத்திவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமிழ்நாடு முதலமைச்சரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதற்கான தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்கின்றனர். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details