தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் திமுக புகார் - திமுக
2019-04-18 15:40:45
சென்னை: பிற்பகல் மூன்று மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 52.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. காலையில் தீவிரமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் செல்லச் செல்ல மந்தமானது.
இந்நிலையில், பிற்பகல் மூன்று மணிக்கு மேல் வாக்குசாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றத் திட்டமிட்டிருப்பதாக திமுக சட்டத் துறை செயலாளர் கிரிராஜன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்துள்ளார்.