இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளதால், இதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து ஆராய்ந்து சமூக, பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்துதர வேண்டும்.
அன்றாடங் காய்ச்சிகள், கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வார ஊதியம் பெறுபவர்கள், சிறு வியாபாரிகள், குறு நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெசவாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு அவர்களுக்கு அறிவித்த இழப்பீடுகள் நிச்சயம் போதுமானது அல்ல. எனவே, உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை, அரசு வழங்கிட வேண்டும்.