தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: அப்பாவி மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Jul 23, 2020, 3:13 PM IST

திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் ‘மரணத்திலும் பொய்க் கணக்கு’ என்ற தலைப்பில் இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அதில் அவர், ” மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத்தான் இருக்கும். இது மாதிரியான கொலை பாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை; இனியும் பார்க்கவும் முடியாது.

கரோனாவால் நேற்று வரை 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு கூறியது. ஆனால், ஒரே நாளில் 3 ஆயிரத்து 144 பேர் இறந்துள்ளதாக கூறுகிறது. இதற்கு அரசு தரப்பில், ‘மார்ச் 1 முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது. அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம்’ என்று நேற்று காரணம் சொல்லியது. இது எவ்வளவு கொடுமையான விஷயம்.

’தமிழ்நாட்டில்தான் மரண விகிதம் குறைவு’ என்று தன்னுடைய சாதனை மாதிரி முதலமைச்சர் சொன்னார். சாவை சாதனையாக சொன்ன முதல் ஆள் இவராகத்தான் இருப்பார். அப்பாவி மக்களின் மரணத்தை மறைத்த பழனிசாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவரை அவர் எத்தனையோ பொய்கள் சொல்லி இருந்தாலும், இப்போது சொன்னது மக்களின் உயிருடன் விளையாடியது ஆகும். எனவே அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கரோனா மரணத்தைப் போல கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒரு கொள்ளை நோயை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக்கூட்டத்தை வைரசைப் போல விரட்டுவதற்குச் சூளுரைப்போம் “ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 27 துணை ஆட்சியர்கள் பணி நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details