சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’எங்களுக்கு மக்கள் உயிர் தான் முக்கியம், எதிர்க்கட்சி சொல்வதையெல்லாம் கேட்க முடியாது என்று கூறினார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்காக கூட்டவேண்டும் என்றும், ஆலோசனை கூறுவதற்கு எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
முதலமைச்சரின் இந்த கருத்திற்கு திமுகவின் தோழமைக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, “முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல. எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை உடனே ஏற்றால், அது ஆளுங்கட்சிக்குக் கவுரவக் குறைவு என்பதுபோல் தவறான ஒரு மயக்கத்தில் தன்முனைப்பில் பேசக்கூடாது.