தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுடன், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் மே 23ஆம் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், ஒன்பது தொகுதிகளில் அதிமுகவும் வென்றுள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் மே 28 ஆம் தேதி பதவியேற்பு - ஸ்டாலின்
சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றபெற்ற திமுகவின் 13 எம்எல்ஏக்கள், மே 28ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
stalin
வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள், மே 28ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர். ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக ஒன்பது தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாறாக மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்த்து 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.