தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறது: பிரேமலதா விஜயகாந்த் - press meet

சென்னை: பரப்புரைக்காக செல்லும் இடமெல்லாம் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Apr 12, 2019, 7:36 PM IST

தேர்தல் பரப்புரைக்காக விருதுநகர் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

அப்போது, “தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிக்கும் நான் நேரடியாக பிரசாரத்திற்கு செல்கிறேன். செல்கின்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறது. 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடைசியாக 15,16 ஆகிய தேதிகளில் வட சென்னையில் என்னுடைய பிரசாரத்தை முடிக்கிறேன்.

இப்போது வருகின்ற கருத்துக்கணிப்பு எல்லாம் கருத்து திணிப்பு. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். நடைபெறுகின்ற வருமான வரித்துறை சோதனை எல்லாம் சட்டத்தின் கடமை எதிர்க்கட்சி என்பதால் யாரையும் இங்கு பழி வாங்கவில்லை. சட்டம் அதன் கடமையை செய்கிறது” என்றார்.

மேலும், தேர்தல் பரப்புரைகளில் ஜெயலலிதா பாணியை பின்பற்றுகிறீர்களா என பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தன்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்றும், ஜெயலலிதா இல்லாததால் தற்போது மக்கள் தனக்கு கூடுதல் கவனம் ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details