தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்’ - மகேந்திரனுக்கு விஜயகாந்த் இரங்கல் - விஜயகாந்த்

சென்னை: இயக்குநர் மகேந்திரனின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

vijayakant

By

Published : Apr 2, 2019, 7:56 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரையுலகில் நல்ல குடும்ப கதைகளை தந்து கலையுலகத்திற்கு பெருமையை சேர்த்தவர் மகேந்திரன்.

அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


ABOUT THE AUTHOR

...view details