தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேமுதிக நிர்வாகிகள் - அதிமுக அமைச்சர்கள் தொகுதிப் பங்கீட்டிற்காக சந்திப்பு

சென்னை: தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியின் நிர்வாகிகள் இன்று அதிமுகவின் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

By

Published : Feb 28, 2021, 9:36 PM IST

தேமுதிக நிர்வாகிகள்-அதிமுக அமைச்சர் தொகுதி பங்கீட்டிற்கான சந்திப்பு
தேமுதிக நிர்வாகிகள்-அதிமுக அமைச்சர் தொகுதி பங்கீட்டிற்கான சந்திப்பு

அதிமுக அதன் கூட்டணியான பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தேமுதிகவை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் தவித்து வந்தது. இந்த நிலையில், தேமுதிகவின் பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி குறித்து அழைப்புவிடுத்தால்தான், பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று பேசினார்.


மேலும், நேற்றைய தினம் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் 10 விழுக்காடு வாக்குகள் பெறும் என்று தெரிவித்த நிலையில், அரசியல் அரங்கில் புதுசர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கூட்டணி குறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை நேற்றைய தினம்(பிப்.27) அதிமுகவின் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கே.பி. முனுசாமி ஆகியோர் சந்தித்துப்பேசினர்.

இதனைத்தொடர்ந்து, தேமுதிக சார்பில் இன்று முன்னாள் எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, இளங்கோ மற்றும் அனகை முருகேசன், அதிமுக அமைச்சர் தங்கமணியைச் சந்தித்தனர்.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் சுமார் 14 முதல் 17 சீட்டுகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படலாம் என ஏற்கெனவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதையும் படிங்க: இரண்டு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவதாகத் தகவல்

ABOUT THE AUTHOR

...view details