அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக!
13:13 March 09
அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், “நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து (மார்ச் 9) அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்