இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு ஏழை இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்காக 5,460 டன் பச்சரிசியை வழங்கக்கூடாது என்று இந்து முன்னணி என்ற அமைப்பின் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, இந்து முன்னணி பதிவுசெய்யப்பட்ட அமைப்பா? என்று கேட்ட கேள்விக்கு, வாதாடிய வழக்குரைஞர் சரியான பதிலை அளிக்க முடியாததால், தனி நபர் வழக்காக வாதாடப்பட்டது.
அப்போது, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடு உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியமானது என்பதை ‘பிரபுல்லா கொராடியா Vs இந்திய யூனியன்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழக்கொன்றின் (2011) தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.